Aari Reaction To Archana Daughter Speech

அர்ச்சனா கண்ணீர் விட அவரது மகள் சொன்ன விஷயம் கேட்டு மேடையிலேயே ஆரி கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Aari Reaction To Archana Daughter Speech : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவு பெற்றது. டைட்டில் வின்னராக ஆரி தேர்வானார்‌.

இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் நேற்றைய எபிசோடில் அர்ச்சனா தன்னுடைய மகளுடன் சேர்ந்து பர்ஃபாமென்ஸ் ஒன்றை கொடுத்தார். அப்போது அன்பு தோற்றுவித்து மா என அர்ச்சனா அழ அன்பு தோற்காது 66 நாளில் உன் அன்பை காட்டிவிட முடியாது என சாரா சமாதானம் செய்தார்.

அதன் பின்னர் தரக்குறைவான விமர்சனங்கள் வேணாம் என பேசினார். அதற்கு டிடியும் அதுதான சொல்லி பாராட்டு தெரிவித்தார்.

பின்னர் மேடையில் பேசிய ஆரி, நாங்க எதுவும் சொல்லல இந்த சின்ன பொண்ணு கேட்கிறார் என்ன பதில் சொல்லப் போறீங்க? தரக்குறைவான விமர்சனங்கள் வேண்டாம் என பேசினார்.