Aari Arjunan Entry in Bigg Boss Kondattam

பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி வாத்தி கம்மிங் பாடலுடன் பைக்கில் செம்ம மாஸாக என்ட்ரி கொடுத்துள்ளார் ஆரி அர்ஜுனன்.

Aari Arjunan Entry in Bigg Boss Kondattam : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 4-வது சீசன் இரு வாரங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது.

இந்த சீசனின் வெற்றியாளராக ஆரி அர்ஜுனன் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் நிறைவு பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஆரி அர்ஜுனன் பைக்கில் செம்ம மாஸாக வாத்தி கம்மிங் பாடலுடன் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆரி ரசிகர்கள் இதனை இணையத்தில் தெரிக்கவிட்ட ட்ரண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.