Aajeeth Video After BB Eviction

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஆஜீத் தன்னுடைய முதல் வீடியோவை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Aajeeth Video After BB Eviction : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஆஜித் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஆஜித் முதல் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் இதுவரை எனக்கு ஆதரவளித்து ஓட்டளித்த அனைவருக்கும் நன்றி. நீங்கள் ஓட்டளிக்கவில்லை என்றால் என்னால் இத்தனை வாரம் உள்ளே இருந்திருக்க முடியாது.

சமூக வலைதளங்களில் என்னைப்பற்றி பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என இரண்டு கமெண்ட்களையும் படித்தேன். பாசிட்டிவ் கமெண்டுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன். நெகட்டிவ் கமெண்ட்டுகளில் நான் மாற்றிக் கொள்ள வேண்டிய விஷயங்களை கட்டாயம் மாற்றிக் கொள்கிறேன்.

ஆனாலும் இக்னோர் நெகட்டிவிட்டி என தெரிவித்துள்ளார். பிக் பாஸ் வீட்டிற்குள் நான் நானாக தான் இருந்தேன் ஒரு இடத்தில் கூட நான் பொய்யாக இருக்கவில்லை என கூறியுள்ளார்.