Kutty-Thala

Aadvik Ajith : அப்பாவிற்கு தப்பாத புள்ள என்பதை நிரூபிக்கும் வகையில் ஆத்விக்கின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். இவருடைய ரசிகர்கள் அனைவருமே தல 59 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்த கொண்டாட்டத்தை மேலும் அதிகமாக்கும் வகையில் குட்டி தல ஆத்விக்கின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் ஆத்விக் பைலட் உடையில் செம கியூட்டாக இருக்கிறார். தல அஜித் எப்படி சினிமா மட்டுமில்லாமல் பைக் ரேஸ், கார் ரேஸ், விமானம் சம்மந்தமான கண்டு பிடிப்புகளில் ஆர்வம் காட்டி வருகிறாரோ அதே போல் ஆதிவிக்கின் ஆசையும் இருப்பதாக அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சமீபத்தில் கடந்து சென்ற ஆத்விக்கின் பிறந்த நாளிற்காக அஜித் ரசிகர்கள் கட் அவுட், பேனர், சுவர் விளம்பரங்கள் என கொண்டாடி மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kutty Thala

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.