விஜய்சேதுபதி என்னோட மாமா..! – வித்தியாசமாக சூரி போட்ட டுவீட்

Aadukalam Movie Secrets : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன்.

இவர் தனுஷ் நடித்த பொல்லாதவன் என்ற படத்தை இயக்கிய பிறகு மீண்டும் ஆடுகளம் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

பல விருதுகளைப் பெற்ற இந்த படத்தில் தனுஷுடன் டாப்ஸி, கிஷோர் மற்றும் பலர் இணைந்து நடித்திருந்தனர்.

மங்காத்தா வெற்றிக்கு காரணம் இது தான் – நிகழ்ச்சி ஒன்றில் ஓபனாக பேசிய சூர்யா!

மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் படத்தில் டாப்ஸி, கிஷோர் மற்றும் வில்லன் நடிகருக்கு குரல் கொடுத்தது யார் என்பதை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நடிகை டாப்சிக்கு நம்ப ஆண்ட்ரியா தான் டப்பிங் செய்துள்ளார். அதேபோல் கிஷோருக்கு சமுத்திரகனி டப்பிங் செய்துள்ளார். வில்லன் நடிகருக்கு ராதாரவி குரல் கொடுத்துள்ளார்.

இது குறித்த வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.