A R Rahman Upcoming Movies

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் நான்கு திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

A R Rahman Upcoming Movies : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ஏ ஆர் ரகுமான். இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இதனை அடுத்து முதல்வன், காதலர் தினம், ஜோடி, ஜில்லுனு ஒரு காதல், போன்ற எண்ணற்ற ஹிட் திரைப்படங்களுக்கு இசை அமைத்து உள்ளார்.

தற்போது ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில், வெளியாகும் அயலான் படத்திற்கும், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் கோப்ரா படத்திற்கும், சிம்புவின் 10 தல படத்திற்கும், இறுதியாக மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்கும், இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்து வருகிறார்.

இது ஏ ஆர் ரகுமான் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன், உற்சாகத்துடனும், காத்துக் கொண்டிருக்கின்றனர்.