Karnan Collection

கர்ணன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இடைவிடாமல் மிரட்டி வருகிறது. ஒன்பது நாள் முடிவில் படத்தின் வசூல் என்ன என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.

9 Days Collection of Karnan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் பரியேறும் பெருமாள் புகழ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள திரைப்படம் கர்ணன். கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது.

முதல் நாளில் தனுஷ் படங்களிலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் கர்ணன் என்ற பெயரை எடுத்தது. தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

இந்த நிலையில் தற்போது 9 நாள் முடிவில் படத்திற்கு கிடைத்த வசூல் என்ன என்பது குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது. அந்த விவரங்கள் இதோ உங்களுக்காக

Day 1 – ₹ 10.40 Cr
Day 2- ₹ 5.50 Cr
Day 3 – ₹ 6.50 Cr
Day 4 – ₹ 2.75 Cr
Day 5 – ₹ 3.10 Cr
Day 6 – ₹ 3.40 Cr
Day 7- ₹ 1.75 Cr
Day 8- ₹ 1.30 Cr
Day 9- ₹ 1.70 Cr

Total – ₹ 36.40 Cr

அதாவது கர்ணன் திரைப்படம் ஒன்பது நாள் முடிவில் தமிழகத்தில் ரூபாய் 36.40 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் கர்ணன் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.