7 Movie Review : Plus and Minus Of Seven Tamil Movie | Tamil Cinema News | Kollywood Cinema News | Tamil Cinema Review | Seven Tamil Movie Review in Tamil
நிசார் ஷபி இயக்கத்தில் ரஹ்மான், ஹவ்னிஷ், ரெஜினா காசென்ட்ரா, நந்திதா ஸ்வேதா, அனிஷா அம்ப்ரோஸ், பூஜிதா பொன்னாடா, த்ரிதா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் 7.

7 Movie Review : 

படத்தின் கதைக்களம் :

கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹவ்னிஷ் ஒரு ஐ.டி கம்பெனியில் பணியாற்றுகிறார். நந்திதா ஸ்வேதாவும் அதே கம்பெனியில் பணியாற்றுகிறார்.

எதிர்பாராத விதமாக இவர்கள் இருவரும் சந்தித்து கொள்கின்றனர். இவர்களிடையே ஏற்படும் நட்பு காதலாகி பின்னர் திருமணமும் செய்து கொள்கின்றனர்.

கொஞ்ச நாள்கள் செல்ல திடீரென கார்த்திக் காணாமல் போய் விடுகிறார். நந்திதா ஸ்வேதா போலீஸ் அதிகாரியாக உள்ள ரஹ்மானிடம் புகார் அளிக்கிறார்.

அவருக்கு முன்பாகவே ஒரு பெண் அதே கார்த்திக் என்னுடைய கணவர் எனவும் அவரை காணவில்லை எனவும் புகார் கூறுகிறார்.

மேலும் இரண்டு பெண்கள் இதே போல் புகார் கூறுகின்றனர். இதனால் போலீஸ் கார்த்திக்கை மோசடி மன்னன் என்ற பெயரில் தேடி வருகின்றனர். கார்த்திக்கும் சிக்கி கொள்கிறார்.

ஆனால் இந்த பெண்களுக்கும் கார்த்திக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது தெரிய வர அப்போ இந்த பெண்கள் எல்லாம் யார்? ஏன் இவர்கள் இப்படியொரு புகாரை கொடுத்தார்கள்? என்பது தான் முற்றிலும் மாறுபட்ட கதையும் களமும்.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

ரஹ்மான், ஹவ்னிஷ், ரெஜினா, நந்திதா என ஒட்டு மொத்த நடிகர் நடிகைகளின் நடிப்பு அற்புதமாக அமைந்துள்ளது.

தொழில் நுட்பம் :

இசை :

சைதான் பரத்வாஜின் இசையும் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம், திரில்லர் படம் என்பதை உணர்ந்து அதற்கேற்றாற் போல இசையமைத்து கொடுத்துள்ளார்.

ஒளிப்பதிவு :

இயக்குனரான நிசார் ஷபி அவர்களே இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் ஹீரோ, ஹீரோயின்கள் முதல் பாட்டி வரை ஒவ்வொருவரையும் மிக அழகாக காட்டியுள்ளார்.

எடிட்டிங் :

பிரவீன் கே.எல் இப்படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார், அவருடைய பணியை அவர் திறம்பட செய்து முடித்துள்ளார்.

இயக்கம் :

நிசார் ஷபி முற்றிலும் மாறுபட்ட கதையை கையாண்டது மட்டுமில்லாமல் அதனை அழகான கோர்வையாக மக்களிடம் கொண்டு சேர்க்க தீவிர முயற்சி செய்துள்ளார். படத்தை பார்க்கும் போது அறிமுக இயக்குனரின் படம் என்ற சற்றும் தோன்றவில்லை.

தம்ப்ஸ் அப் :

1. ஒட்டு மொத்த நடிகர்களின் நடிப்பு
2. மாறுபட்ட கதைக்களம்
3. சரஸ்வதியாக நடித்துள்ள பாட்டியின் நடப்பு
4. இசை

தம்ப்ஸ் டவுன் :

1. திரைக்கதையில் சில இடங்களில் தடுமாற்றம்
2. லாஜிக்கல் தவறுகள்

மொத்தத்தில் செவன் திரைப்படம் கொடுத்த காசுக்கு ஒர்த், வித்தியாசமான படத்தை பார்த்த ஒரு ஃபீல் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.

YouTube video

REVIEW OVERVIEW
7 படத்தின் விமர்சனம்.!
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
7-movie-reviewமொத்தத்தில் செவன் திரைப்படம் கொடுத்த காசுக்கு ஒர்த், வித்தியாசமான படத்தை பார்த்த ஒரு ஃபீல் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.