6th Eviction in Bigg Boss 4

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

6th Eviction in Bigg Boss 4 : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா மற்றும் சம்யுக்தா என ஐந்து பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவர்களை தொடர்ந்து இந்த வாரம் வெளியேற்றத்திற்கான நாமினேஷன் பட்டியலில் ஆரி, அனிதா, சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன், ஷிவானி, நிஷா மற்றும் ஆஜித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில் நடிகர் ஆரி அதிகமாக ஓட்டுக்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். அனிதா மற்றும் சனம் செட்டி ஆகியோர் மிக மிக குறைந்த ஓட்டுகளை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் சூப்பர் சிங்கர் ஆஜித்திற்கும் பெரிய அளவில் ஓட்டுக்கள் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக அனிதா, சனம் மற்றும் ஆஜித் ஆகியோரில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.