5th Eviction in Bigg Boss4

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

5th Eviction in Bigg Boss4 : தமிழ் சின்னத்திரை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதுவரை இந்த சீசனில் இருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா என மொத்தம் நான்கு பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து ஐந்தாவது எவிக்ஷன் இந்த வாரம் நடைபெற உள்ளது.

இந்த வாரத்திற்கான நாமினேஷனில் இடம்பெற்ற போட்டியாளர்களில் ஜித்தன் ரமேஷ் தான் மிக மிக குறைந்த ஓட்டுகளை பெற்று இருப்பதாகவும் அவர் தான் வீட்டை விட்டு வெளியேற போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எந்த ஒரு இடத்திலும் பெரியதாக ஈடுபாடு இல்லாமல் இருந்து வருகிறார் ரமேஷ். நிஷா, ரியோ, அர்ச்சனா சம்யுக்தா டீமுடன் இணைந்து செயல்படுவதால் இவர் மீது ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் ரமேஷ் வெளியேறுவது ரசிகர்கள் மத்தியில் ஒரளவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அர்ச்சனா & கோ டீமிற்கு கொஞ்சம் பயம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.