YouTube video

Apple Products Manufacture in Tamilnadu : தமிழகத்தில் அன்னிய முதலீடுகளை ஈர்த்து பொருளாதாரத்தில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக தமிழக அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது.

ஏற்கனவே பல்லாயிரம் கோடி முதலீட்டில் பல்வேறு தொழில் ஆதாரங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பலருக்கும் வேலை வாய்ப்புகள் உருவாக்கியுள்ளன.

இந்த நிலையில் அடுத்ததாக ஆப்பிள் நிறுவனத்துடன் தமிழகம் கைகோர்த்துள்ளது. ரூபாய் 52 ஆயிரத்து 257 கோடி செலவில் பிப்ரவரி புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. இதன் மூலம் 94,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என தகவல் கிடைத்துள்ளது.

Apple Products Manufacture in Tamilnadu

அதேபோல் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ரூபாய் 5,763 கோடி செலவில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18,250 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

Pegatron நிறுவனம் 1,100 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதன்மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் 14000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது. Luxshare of Thaiwan நிறுவனம் ரூபாய் 745 கோடி முதலீடு செய்ய 4000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சன் எடிசன் நிறுவனம் 4,629 கோடி முதலீடு செய்ய 5400 பேருக்கு வேலைவாய்ப்பும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 2,354 கோடி முதலீடு செய்ய 2200 வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிய வந்துள்ளது.ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த Eickhoff Wind Ltd நிறுவனம் ரூபாய் 627 கோடி முதலீடு செய்ய 100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

மேலும் டிவிஎஸ் நிறுவனம் ரூபாய் 2500 கோடி முதலீடு செய்ய திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனவும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.