காமெடி நடிகர்கள் பலர் இணைந்து நடித்துள்ள 50/50 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அப்படி தான் இந்த வாரம் கிருஷ்ணா சாய் இயக்கத்தில் 50/50 என்ற திரைப்படம் ரிலீசாக உள்ளது.
யோகி பாபு, சேது, மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், ஸ்ருதி ராமகிருஷ்ணன், ஸ்ரீ ரஞ்சினி மயில் சாமி, KPY தீனா என பல காமெடி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஸ்னீக் பீக் வீடியோ ஆகியவை இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றிருப்பதால் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.
50/50 திரைப்படம் உலகம் முழுவதும் வரும் 27-ம் தேதி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாக உள்ளது.