5 new districts in Tamil Nadu .. Government of Tamil Nadu released
5 new districts in Tamil Nadu .. Government of Tamil Nadu released

சென்னை: தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. இந்நிலையில் பல மாவட்டங்களின் எல்லைகள் பெரிதாக இருப்பதால், அவற்றை பிரிக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “வேலூரை பிரித்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வேலூர் மாவட்டத்தில் புதிதாக வேலூர், குடியாத்தம் என புதிய வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி ஆகிய இரண்டும் வருவாய் கோட்டங்களாக செயல்படும் எனவும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, அரக்கோணம் ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜாபாத், ஆற்காடு, நெமிலி மற்றும் அரக்கோணம் ஆகியவை புதிய வட்டங்களாக செயல்படும். மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரம்பத்தூர், என 2 வருவாய் கோட்டம், 5 தாலுகாக்கள் வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரம்பத்தூர், வாலாஜாபாத், குன்றத்தூர் தாலுகாக்கள் காஞ்சிபுரத்தில் வருகின்றன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் என 3 வருவாய் கோட்டங்கள் வருகின்றன. செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், உள்ளிட்ட 8 தாலுகாக்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகிறது.

மேலும் நெல்லை மாவட்டத்தை பிரித்து நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை, மானூர், நாங்குநேரி, சேரன்மகாதேவி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், திசையன்விளை ஆகிய தாலுக்காகளும், தென்காசி மாவட்டத்தின் கீழ் சங்கரன்கோவில், செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வி.கே புதூர், திருவேங்கடம், ஆலங்குளம் ஆகிய தாலுகாக்கள் செயல்படும் எனவும் அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.