3rd Time Changes in Karnan

தொடர்ந்து கர்ணன் திரைப்படத்தில் பிரிவு எதிர்ப்புகள் இருந்து வந்ததால் மூன்றாவது முறையாக படத்தில் இடம்பெறும் வருடத்தின் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

3rd Time Changes in Karnan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கர்ணன்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இருப்பினும் இந்த படத்தில் நடந்த பிரச்சினையை குறிப்பிட்ட வருடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின் வைத்த கோரிக்கையை ஏற்று வருடத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக வருடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி என அரசு அறிவித்து இருந்தாலும் படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.