டொராண்டோ தமிழ் இன்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவல் விழாவில் நாமினேஷன் லிஸ்டில் 3 தமிழ் திரைப்படங்கள் - என்னென்ன படங்கள் தெரியுமா?
3 Selected Tamil Movies to Toronto International Film Festival

டொரான்டோ தமிழ் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் விழாவில் 3 தமிழ் திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன.

3 Selected Tamil Movies to Toronto International Film Festival : ஒரு வருடமும் டொராண்டோ தமிழ் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் விழா நடைபெற்று வருகிறது.

இந்த வகையில் இந்த வருடத்திலும் இந்தத் திருவிழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு வருடமும் தரமான தமிழ் திரைப்படங்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த வருடத்திற்கான விழாவில் 3 தமிழ் திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன. அவை என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

  1. ஒத்த செருப்பு
  2. கன்னி மாடம்
  3. சில்லு கருப்பட்டி

விஜய் ரசிகரின் இயக்கத்தில் பாண்டியன் ஸ்டோர் கதிர் நடித்துள்ள குறும்படம் – பட்டைய கிளப்பும் போஸ்டர், தெறிக்க விட்டு கொண்டாடும் விஜய் ரசிகர்கள்!(Opens in a new browser tab)

ஒத்த செருப்பு திரைப்படத்தை இயக்குனர் பார்த்திபன் எழுதி இயக்கி நடித்திருந்தார். படம் முழுவது ஒரே ஆளாக அவர் மட்டுமே இடம் பெற்றிருந்தார். இந்த படம் தமிழ் சினிமாவின் தனித்துவம் வாய்ந்த திரைப்படமாக்க பார்க்கப்படுகிறது. படம் முழுவதும் ஒரே நாளில் பயணிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னி மாடம் திரைப்படத்தை சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகரான போஸ் வெங்கட் இயக்கி இருந்தார். சமூக கருத்துள்ள திரைப்படமாக உருவாகி வந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சில்லு கருப்பட்டி : நடிகர் சூர்யா தயாரிப்பில் உருவாகியிருந்த இப்படத்தை ஹலிதா ஷமீம் இயக்கி இருந்தார். இந்தப் படமும் திரையுலகில் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய இந்த மூன்று திரைப்படங்கள் தான் டொராண்டோ தமிழ் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் நிகழ்ச்சிக்கு தேர்வாகியுள்ளன. இவற்றில் எந்த படத்திற்கு விருது கிடைக்கும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.