சுல்தான் திரைப்படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

3 Days Collection of Sulthan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் சுல்தான்.

கடந்த ஏப்ரல் 2-ம் தேதி தமிழ், தெலுங்கு என இப்படம் இரண்டு மொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது‌. இருப்பினும் படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த மூன்று நாள் முடிவில் தமிழகத்தில் ரூபாய் 15 கோடியும் உலக அளவில் ரூபாய் 25 கோடி வசூலும் பெற்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் எனவும் தகவல் கிடைத்துள்ளது‌.