3 Days Collection of Karnan

கர்ணன் திரைப்படத்தில் 3 நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

3 Days Collection of Karnan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் கர்ணன். கடந்த ஏப்ரல் 9ம் தேதி வெளியான திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படம் வசூலிலும் இடை விடாமல் கலக்கி வருகிறது. முதல் நாளில் கர்ணன் திரைப்படம் என்பது 80 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்து அதிகம் வசூல் செய்த தனுஷ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.

மூன்று நாள் முடிவில் இப்படம் ரூபாய் 23 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.