தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக மதுரையை அறிவிக்க வேண்டும் என அமைச்சர்கள் சிலரும் திருச்சி அறிவிக்க வேண்டுமென அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

2nd Capital City in Tamilnadu : தமிழகத்தின் தற்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புகள், கொரானா மருத்துவமனை மற்றும் சிகிச்சை என அனைத்திலும் தமிழக முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

மேலும் தமிழகத்தின் தலைநகரமாக சென்னை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக மதுரையை அறிவிக்க வேண்டும் எனவும் திருச்சியை அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக மதுரையை உருவாக்க வேண்டும் என அமைச்சர் உதயகுமார் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்கள் எம்ஜிஆரின் கனவை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக திருச்சி அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதனால் தமிழக அரசின் முடிவு என்னவாக இருக்கும்? தமிழகத்தின் அடுத்த தலைநகரம் மதுரையா? திருச்சியா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.