Movies 2019

2019 Tamil Movies : மக்கள் மத்தியில் அதிகமான எதிர்பார்ப்புகளுடன் 2019-ல் வெளியாக உள்ள படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

பொதுவாகவே திரையுலகில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த 2018-ல் கூட சுமார் 171 படங்கள் ரிலீசாகி இருந்தன.

ஆனால் அவைகளில் ஒரு சில படங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அப்படி இந்த வருடம் அதாவது 2019-லும் மக்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படங்கள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க.

விஸ்வாசம் :

தல அஜித் நடிப்பில் வெளியாக உள்ள விஸ்வாசம் படம் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 10-ம் தேதி வெளியாக உள்ளது.

பேட்ட :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படமும் மிக பெரிய எதிர்பார்ப்புகளுடன் ஜனவரி 10-ம் தேதி விஸ்வாசம் படத்துடன் மோத உள்ளது.

NGK / காப்பான் :

செல்வராகவன் இயக்கத்தில் NGK, கே.வி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் என சூர்யா நடிப்பில் உருவாகி வரும் இரண்டு படங்களும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன.

வந்தா ராஜாவாக தான் வருவேன் :

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், மஹத், கேத்ரின் தெரசா ஆகியோர் நடித்து வரும் வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்திற்கு சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஜனவரி இறுதியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் 2 :

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனும் காஜல் அகர்வாலும் இணைந்து நடிக்க உள்ள இந்தியன் 2 படம் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் ஜனவரி 18-ம் தெத்து முதல் தொடங்க உள்ளன.

சூப்பர் டீலக்ஸ் :

விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி லேடி கெட்டப்பில் நடித்து இருப்பதால் படத்திற்கு அளவில்லாத எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தல 59 :

தல அஜித் எச் வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார். இந்த படம் அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

தளபதி 63 :

தளபதி விஜய் மெகா கூட்டணியாக அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்க உள்ள விஜய் 63 படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது.

தேவ் :

கடைக்குட்டி சிங்கம் வெற்றிக்கு பிறகு கார்த்தி தேவ் படத்தில் ரகுல் ப்ரீத் சிங்குடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இந்த படமும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் 2019-ல் வெளியாக உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.