2 Point O Mini Review

2 Point O Mini Review : லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் என பலர் நடித்து வெளியாகியுள்ள படம் 2 பாயிண்ட் ஓ.

இந்த படத்தின் முதல் பாதி விமர்சனத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

படம் தொடங்கியதும் சில மணி நிமிடங்களியே ஷங்கர் நம்மை கதைக்குள் கொண்டு சென்று விடுகிறார். முதல் பாதியை பொறுத்தவரை நேரத்தை வீணாக்காமல் படத்தை கச்சிதமாக கொண்டு சென்றுள்ளார்.

ரஜினியின் டைட்டில் கார்டே 3D-ல் தியேட்டரையே அதிர வைக்கிறது. மேலும் சூப்பர் ஸ்டாரின் என்ட்ரியே படு மாஸாக ஒரு ஸ்டண்ட் காட்சியுடன் தொடங்குகிறது.

ஷங்கர் தமிழ் சினிமாவை தொழில்நுட்ப வளர்ச்சியில் அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுள்ளார்என்றே கூறலாம்.

மொத்தத்தில் முதல் பாதி வேற லெவலில் உள்ளது, மேலும் படத்தின் எமோஷனல் காட்சிகள், விறுவிறுப்பான திரைக்கதை அனைத்தும் அடுத்த பகுதியில் இடம் பெறும்.

வில்லனாக நடித்துள்ள அக்ஷய் குமாருக்கு பிரபல நடிகரான ஜெயா பிரகாஷ் வாய்ஸ் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.