2.O Tamil Review : லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் என பலர் நடித்து வெளியாகியுள்ள படம் 2 பாயிண்ட் ஓ.
ஷங்கர் பிரம்மாண்டமாக இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா அவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கதைக்களம் :
தொலைபேசியின் கதிர்வீச்சுகளால் பறவையினங்களை அழித்தவர்களை வில்லனான அக்ஷய் குமார் பழி வாங்க துடிக்கிறார். இவரிடம் இருந்து மக்களை காப்பாற்ற போராடுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ( சிட்டி ). இவர்களுக்கு இடையில் நடக்கும் விஞ்ஞான யுத்தமே இப்படத்தின் கதைக்களம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் :
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் தன்னுடைய முழுமையான நடிப்பாற்றலுடன் ரசிகர்களை மிரள வைத்துள்ளார். தன்னுடைய ரசிகர்களை ஆரவாரத்துடன் கொண்டாட வைத்துள்ளார்.
அக்ஷய் குமார் :
அக்ஷய் குமார் இப்படத்திற்காக அதிகமான ரிஸ்க் எடுத்துள்ளார். அவருடைய மேக்கப் பிரம்மிக்க வைத்துள்ளது.
ரிஸ்க்கான கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் தன்னுடைய துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அக்ஷய் குமாருக்கு பிரபல தமிழ் நடிகரான ஜெய பிரகாஷ் குரல் கொடுத்துள்ளார்.
எமி ஜாக்சன் :
எமி ஜாக்சன் தனக்கு பெரிய அளவிலான கதாபாத்திரம் இல்லை என்றாலும் தன்னுடைய பகுதியை அருமையாக முடித்து கொடுத்துள்ளார். அவருடைய ஒல்லியான உடலமைப்பு ஸ்டண்ட் காட்சிகளுக்கு பெரிதும் உதவியாக அமைந்துள்ளது.
இயக்குனர் ஷங்கர் :
இயக்குனர் ஷங்கரின் விறுவிறுப்பான திரைக்கதை நம்மை பரபரப்படைய செய்கின்றன. ஷங்கர் அவர்களின் இந்த பிரம்மாண்ட முயற்சி இந்திய சினிமாவையே பெருமை கொள்ள வைத்துள்ளது.
மேலும் ஷங்கரின் இந்த முயற்சி மிக பெரிய வெற்றியாகவே அமைந்துள்ளது. அவருக்கு ரசிகர்களின் சார்பாக மிக பெரிய பாராட்டுகள்.
தொழில்நுட்பம் :
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை வழக்கம் போல இப்படத்திற்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது. மற்ற படங்களை காட்டிலும் 2 பாயிண்ட் ஓ படத்திற்காக புதுப்புது வகையான இசையை படத்தில் சேர்த்து கொடுத்துள்ளார். படத்தின் பாடல்கள் அனைத்தையும் சரியான இடத்தில் சேர்த்து படத்திற்கு மெருகூட்டியுள்ளனர்.
நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு, 3D தொழிநுட்பம், ரசூல் பூக்குட்டியின் சவுண்ட் எஞ்சினீயரிங் ஆகியவை தரமானவையாக அமைந்துள்ளது. நிச்சயம் இவர்களுக்கு பல விருதுகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
தம்ப்ஸ் அப் :
- பரபரப்பாக்கும் கிளைமாக்ஸ் காட்சிகள்
- தமிழ் சினிமாவை ஹாலிவுட் தரத்தில் கொடுத்தது.
- ரஜினிகாந்த், அக்ஷய் குமாரின் திறமையான நடிப்பு