ஜெய்ப்பூர் பிலிம் பெஸ்டிவல் 2 விருதுகளை வென்றுள்ளது தமிழ் சினிமாவைச் சேர்ந்த சியான்கள் திரைப்படம்.

2 JIFF Awards for Chiyangal Movie : தமிழ் சினிமாவில் கேஎல் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் வைகரை பாலன் இயக்கத்தில் கரிகாலன் நடிப்பில் வெளியான திரைப்படம் சியான்கள்.

வயதானவர்களின் கனவுகளையும் ஆசைகளையும் வெளிப்படுத்தும் திரைப்படமாக வெளிவந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

Director Vaigarai Balan @ Chiyangal Movie Working Stills

மக்கள் பலரும் இந்த படத்தை கொண்டாடித் தீர்த்தனர். இந்த நிலையில் தற்போது 13வது ஜெய்பூர் ஃபிலிம் பெஸ்டிவல் நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவில் வெளியான சியான்கள் திரைப்படம் இரண்டு முக்கிய விருதுகளை வென்றுள்ளது.

அதாவது இத்திரைப்படம் பெஸ்ட் ஒரிஜினல் ஸ்கிரீன் பிளே என்ற விருதையும் Best Film For Sridevi JIFF Indian Panorama என்ற விருதையும் வென்றுள்ளது.

இன்டர்நேஷனல் அளவில் சியான்கள் திரைப்படம் 2 விருதுகளை வென்றது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நல்ல கருத்துள்ள திரைப்படத்திற்கு மக்கள் கொடுத்த வரவேற்பாக இந்த விருதுகள் பார்க்கப்படுகிறது.