1st Jodi in Mr Mrs Chinnathirai

Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் முதல் ஜோடி யார் என்பதை விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

1st Jodi in Mr Mrs Chinnathirai : தமிழ் சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களுக்கு என பெயர் போன சேனல் விஜய் டிவி. இந்த தொலைக்காட்சி சேனலில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து Mr & Mrs சின்னத்திரை என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

வரும் ஏப்ரல் 24ஆம் தேதி முதல் மாலை ஆறு முப்பது மணிக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல் ஜோடியாக யோகேஷ் மற்றும் மைனா நந்தினி தம்பதியினர் கலந்து கொள்ள உள்ளனர்.

இதுகுறித்த போஸ்டரை விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.