17,686 ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு வாபஸ் - முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு.!! | EPS

Edappadi Palanisamy Announcement to Govt Staff : தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பான ஆட்சி வழங்கி வருகிறது. வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் முதல்வர் பழனிசாமி மாவட்டம் மாவட்டமாக சென்று வாக்குகளை சேகரித்து வருகிறார்.

அதே சமயம் தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களையும் அமுலுக்கு கொண்டு வருகிறார். இந்த நிலையில் தமிழகத்தில் ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் உட்பட 17,686 பேர் மீது தொடரப்பட்டு இருந்த 408 வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார்.

EPS in Kanchipuram Meeting Highlights

ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை ஆணையிட்டவுடன் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் ஊதியக் குழுவை அமைத்து பரிசீலனை செய்து ஒரே மாதத்தில் ஊதிய உயர்வை வழங்கி அதிமுக அரசு ஆணையிட்டதாக தெரிவித்துள்ளார்.மேலும் அதிமுக அரசு ஒருபோதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் கோரிக்கையை புறம் தள்ளியது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.