13 members were Sworn in as MLAs : DMK | ADMK | MK.Stalin | Political News, Tamil nadu, Politics, BJP, DMK, ADMK, Latest Political News

13 members were Sworn in as MLAs :

சென்னை: சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்கள் 13 பேர், சபாநாயகர் முன்பு இன்று உறுதிமொழி ஏற்று பதவியேற்றனர்.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை கடந்த 23ம் தேதி எண்ணி முடிக்கப்பட்டது.

அதில் பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், திருவாரூர், குடியாத்தம், ஆம்பூர், தஞ்சாவூர், ஓசூர், அரவக்குறிச்சி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 13 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் அதிரடியாக வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வரும் 29-ம் தேதி பதவியேற்பு.!

சூலூர், பாப்பிரெட்டிப்பட்டி, நிலக்கோட்டை, பரமக்குடி, விளாத்திகுளம், சோளிங்கர், மானாமதுரை, அரூர், சாத்தூர் ஆகிய 9 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடதக்கது.

இதையடுத்து சென்னையில் அண்ணா அறிவாலயத்தில், இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற 13 எம்.எல்.ஏ.க்கள் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிலையில் சென்னை உள்ள தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் முன்னிலையில் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக எம்எல்ஏக்கள் 13 பேர்,

சபாநாயகர் முன்பு உறுதிமொழி ஏற்று இன்று பதவியேற்றனர். மேலும் சட்டப்பேரவையில் திமுகவுக்கு 88 எம்.எல்.ஏ.க்கள் இருந்த நிலையில் தற்போது 101-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் திமுக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கட்சியின் முன்னணி தலைவர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின் பேசியதாவது,சட்டமன்ற கூட்டம் நடக்கும் தேதி அறிவித்த பின் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து முடிவெடுக்கப்படும். திமுகவின் அதிரடியை பொறுத்திருந்து பாருங்கள்(!!) என்று கூறியுள்ளார்.

கல்யாணமான அதே வேகத்தில் சிம்பு வீட்டில் திடீர் பஞ்சாயத்து!

மேலும் சட்டமன்றம் கூடும் நேரத்தில் திமுகவின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்க்கவும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற ஜூன் மாதம் 2வது வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளது குறிப்பிடதக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.