100 Tamil Movie Review | Plus And Minus of Atharvaa's 100 Movie | 100 Review | Tamil Review of 100 Movie | 100 full Tamil Movie Review

சாம் ஆண்டன் இயக்கத்தில் Auraa Productions நிறுவனத்தின் தயாரிப்பில் அதர்வா, ஹன்ஷிகா, யோகி பாபு, ராதா ரவி, ஆடுகளம் நரேன், ஆகாஷ்தீப் சைகள் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 100.

100 Movie Review  

படத்தின் கதைக்களம் :

போலீஸ் வேலைக்காக காத்திருக்கும் அதர்வா ஒரு அடி தடியுடன் அப்பாயின்மென்ட்டை வாங்கி போலீசாகிறார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி ஸ்டேஷனலில் ஆக்ஷன் போலீசாக பணிபுரியும் வேலை இல்லை. கண்ட்ரோல் ரூமில் அமர்ந்து போலீசுக்கு வரும் கால்களை பேசி அதனை ஸ்டேஷன்களுக்கு தெரியப்படுத்துவது தான் வேலை.

ஆரம்பத்தில் இந்த வேலையின் மீது ஈடுபாடு இல்லாமல் தனது பணியை தொடங்குகிறார் அதர்வா. அதன் பின்னர் குழந்தை கடத்தல் தொடர்பாக ஒரு போன் கால் வர சத்தமில்லாமல் ஆக்ஷனில் இறங்கி சாதிக்கிறார்.

இதே போல் ஒரு பெண் கடத்தப்பட்டு அந்த பெண்ணை கொலை செய்து விட்டது போல் நாடகம் நடத்தி அந்த பெண்ணை வெளிநாட்டுக்கு விற்பனை செய்ய முயல்கின்றது ஒரு கும்பல்.

இந்த கும்பல்களை கண்டு பிடித்து அதர்வா எப்படி வேட்டையாடினர்? இறுதியில் என்ன நடந்தது என்பது தான் இப்படத்தின் மீதி கதையும் களமும்.

இத்தனை கோடிக்கு வியாபாரம் ஆனதா தளபதி 63 சேட்டிலைட் உரிமம் – மிரட்டல் தகவல்!

படத்தை பற்றிய அலசல் :

நடிகர் நடிகைகளின் நடிப்பு :

அதர்வா வழக்கம் போல் பக்காவான கதையை தேர்வு செய்து தரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். போலீஸ் அதிகாரியாக தெறிக்க விட்டுள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹன்ஷிகா உடல் எடையை எல்லாம் குறைத்து ரி-என்ட்ரி கொடுத்துள்ளார். ஆனால் படத்தின் அவரின் கதாபாத்திரத்திற்கு தான் பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை.

ஹன்ஷிகாவின் தம்பியாக நடித்துள்ள ராஜ் ஐயப்பா  எதிர்பாராத கதாபாத்திரத்தில் சூப்பரான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

யோகி பாபு அதர்வாவுடன் படம் முழுவதும் ட்ராவல் செய்கிறார். அவரின் எதார்த்தமான காமெடிகள் ரசிகர்களை சிரிக்க வைப்பது 100 % கேரண்டி.

படத்தின் இயக்குனரான சாம் ஆண்டன் இப்படத்தை வித்தியாசமான திரைக்கதையுடன் பக்காவாக ஸ்கோர் செய்து கொண்டு சென்றுள்ளார். ஆனால் படத்தின் முதல் 15 நிமிடத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

அதன் பின்னர் யோகி பாபு காமெடி, அதர்வாவின் அதிரடியான ஆக்ஷன், எதிர்பார்க்காத ட்விஸ்ட் என சீட்டின் நுனியில் ரசிகர்களை கட்டி போட்டு தன்னுடைய மேஜிக்கை காட்டியுள்ளார்.

தர்பார் டீமுக்கு டார்ச்சர் தரும் மும்பை வில்லன் – என்ன செய்ய போகிறார் முருகதாஸ்?

தொழில்நுட்பம் :

இசை :

ஆக்ஷன் கிரைம் திரில்லர் படம் என்பதை புரிந்து சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஆனால் பாடல்கள் பெரியதாக சொல்லி கொள்ளும் அளவிற்கு இடம் பிடிக்கவில்லை.

ஒளிப்பதிவு & எடிட்டிங் :

கிருஷ்ணன் வெங்கட் அவர்களின் ஒளிப்பதிவு ஏ.எல் ரூபனின் எடிட்டிங் பாராட்டும் விதத்தில் அமைந்துள்ளது.

ஸ்டண்ட் :

திலீப் சுப்புராயனின் ஸ்டண்ட் படத்தின் பெரிய பலம் என்றே சொல்லலாம்.

தம்ப்ஸ் அப் :

1. அதர்வா, ராஜ் ஐயப்பா  நடிப்பு
2. யோகி பாபு காமெடி
3. ஆக்ஷன்
4. கிளைமேக்ஸ் ட்விஸ்ட்

தம்ப்ஸ் டவுன் :

படத்தின் முதல் 15 நிமிடத்தில் மட்டும் கவனம் செலுத்தி இருந்தால் நிச்சயம் 100 வேற லெவல் படமாக அமைந்திருக்கும்.

100 Movie Review | Tamil | Atharvaa | Hansika Motwani ||Yogi Babu || Sam Anton | | kalakkalcinema