பத்து நாள் முடிவில் கர்ணன் படத்தின் வசூல் என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

10 Days Collection of Karnan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

முதல் நாளில் தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில் அதிக வசூலை பெற்ற திரைப்படமாக கர்ணன் இடம் பெற்றுள்ளது.

தற்போது இந்த திரைப்படம் 10 நாளில் ரூபாய் 95 கோடி வசூல் செய்துள்ளது. 10-வது நாளில் இந்த திரைப்படம் ரூபாய் 1.02 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.