1 Year Of Master Selfie

மாஸ்டர் படத்தின் செல்ஃபி புகைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆனதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

1 Year Of Master Selfie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. நெய்வேலி நிலக்கரி சுரங்கப் பாதையில் சூட்டிங் நடந்து முடிந்த பிறகு தளபதி விஜய் கேரவன் மீது ஏறி அமர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ஒரு வருடம் ஆன நிலையில் விஜய் ரசிகர்கள் அனைவரும் #1YearofMasterSelfie என இதனை கொண்டாடி வருகின்றனர்.