1 Week Collection Report of Eeshwaran

ஈஸ்வரன் படத்தின் முதல் வார வசூல் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

1 Week Collection Report of Eeshwaran : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் ஈஸ்வரன்.

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருந்தார். மேலும் பாரதிராஜா உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடித்து இருந்தனர்.

பொங்கல் தினத்தில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படம் வெளியாகி ஒரு வாரம் முடிந்துள்ள நிலையில் இப்படம் தமிழகத்தில் ரூபாய் 9.5 கோடி வசூல் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமல்லாமல் இப்படம் சென்னையில் மட்டும் ரூபாய் 95 லட்சம் வசூலித்திருப்பதாகவும் கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.