YouTube video

Soorarai Pottru Postponed : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூரரைப்போற்று என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இப்படத்தை இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாக இருந்தது.

இந்த நிலையில் விமானப் படையிலிருந்து கிளியரன்ஸ் சட்விகேட் கிடைக்காத காரணத்தினால் இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக நடிகர் சூர்யா அறிவித்துள்ளார்.

சூர்யாவின் இந்த அறிக்கையை பார்த்த ரசிகர்கள் படம் எப்போது ரிலீஸ் ஆனாலும் பரவாயில்லை அதற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம். எந்த பிரச்சனையாக இருந்தாலும் உங்களுடன் நாங்கள் துணை நிற்போம் என கமெண்ட்டுகளில் பதிவு செய்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.