thalapathy 65
தளபதி விஜய் மீண்டும் சொந்த தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது தன்னுடைய உறவினரின் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் மகிழ்திருமேனி தயாரிப்பில் நடிக்கலாம் என கூறப்பட்ட நிலை அது உண்மையில்லை என தெரிய வந்தது.

இதனையடுத்து தற்போது தளபதி விஜய் தன்னுடைய அடுத்த படத்தை தயாரிக்கும் பொறுப்பை அவரின் அப்பா எஸ்.ஏ.சியிடம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தை பேரரசு தான் இயக்க வேண்டும் என எஸ்.ஏ.சி கூறி வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு விஜய் என்ன முடிவெடுப்பார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பேரரசுவும் விஜயை இயக்க தயாராக தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.