அனுஷ்காவின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் அனுஷ்கா, நடிப்பில் நயன்தாராவிற்கே டப் கொடுத்து வந்தவர். பிரம்மாண்ட படங்கள் என்றாலே இயக்குனர்களின் பார்வை அனுஸ்கா பக்கம் தான் திரும்பும்.
சமீப காலமாக உடல் எடையால் நடிக்காமல் இருந்து வந்த அனுஷ்கா தற்போது நிசப்தம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஞ்சலி, மாதவன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
நேற்று தன்னுடைய பிறந்த நாளை அனுஷ்கா நிசப்தம் படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார்.
அனுஷ்காவும் அஞ்சலியும் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோவிற்கு பின்பு மேஜையில் மதுவுடன் ஒரு கிளாஸ் உள்ளது.
இதனை கண்காணித்த நெட்டிசன்கள் இருவரும் சரக்கு அடித்தீர்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.