சைக்கோ படக்குழுவினர் சினிமாவில் சாதிக்க ஆசைப்படுபவர்களுக்கு அசத்தலான வாய்ப்பு ஒன்றை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனரான மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் மற்றும் பலர் இணைந்து நடிக்க இளையராஜா இசையமைத்துள்ள திரைப்படம் சைக்கோ.
தற்போது இப்படக்குழு சினிமாவில் சாதிக்க துடிப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது
ஒரு நடிகர், நடிகை இருவரும் சேர்ந்து சைக்கோ கதையம்சம் உள்ள குறும்படத்தை மொபைல் போன் வாயிலாக உருவாக்க வேண்டும். அதுவும் அந்த குறும்படம் 2 நிமிடத்திற்குள் இருக்க வேண்டும்.
வசனங்கள் ஏதும் இடம் பெறாமல் சைகையும் இசையும் மட்டுமே கருத்தை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட வேண்டும். இந்த குறும்படத்தை #PsychoShortFilmContest என்ற ஹேஸ்டேக் வரும் 27-ம் தேதிக்குள் இன்ஸ்டாகிராமில் வெளியிட வேண்டும்.
மிஸ்கின் மற்றும் முன்னணி இயக்குனர்கள் இணைந்து வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பார்கள். சிறந்த குறும்படம், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை என ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சிறந்த மூன்று குறும்படங்கள் முன்னணி தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளனர்.