Gudka scam case
Gudka scam case

Gudka scam case – சென்னை: ‘குட்கா ஊழல் வழக்கு விசாரணையில் இன்று ஆஜராகுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது’.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பல கோடி ரூபாய் குட்கா ஊழல் வழக்கை சிபிஐ தற்போது விசாரித்து வருகிறது.

தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரின் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது.

மேலும், “கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி 35 இடங்களில் சிபிஐ சோதனையை நடத்தியதில், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது”. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இந்த வழக்கில் , கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணன் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது; ஆனால் இதில், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகாமல் இருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கரை இன்று நேரில் ஆஜராகுமாறு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது; இதேபோல முன்னாள் அமைச்சர் ரமணா உள்ளிட்ட 5 பேரையும் நேரில் வருமாறு சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி, இன்று மதியம் அமைச்சர் விஜயபாஸ்கரும், முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணாவும் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.