Silambarasan Latest GYM Workout Viral Video

YouTube video

Doctor Release Date Changes : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் தன்னுடைய திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் அடுத்ததாக தளபதி விஜய் வைத்து உருவாக உள்ள தளபதி 65 என்ற திரைப்படத்தை இயக்க இருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எழுந்துள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்களை காட்டிலும் தளபதி விஜய் ரசிகர்கள் இந்த திரைப்படத்தை பார்க்க ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Doctor Release Date Changes

சிவகார்த்திகேயன் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படம் வரும் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த ரிலீஸ் தேதியை ஏப்ரல் 14ஆம் தேதிக்கு மாற்றி விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

டாக்டர் திரைப்படம் வெளியாகி அடுத்த வாரத்திலேயே கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை சிவகார்த்திகேயனை வைத்து ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். மேலும் இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயன் திரைப்படமான ஹீரோ படத்துடன் கார்த்தியின் தம்பி திரைப்படம் மோதியது. அப்போது ஹீரோவை காட்டிலும் தம்பி திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.