Action Movie Review

நடிகர் விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, தமன்னா, பழ. கருப்பையா, ராம்கி மற்றும் பலர் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ஆக்ஷன்.

படத்தின் கதைக்களம் :

நடிகர் விஷால் மிலிட்டரில் ஒரு முக்கிய பதவியில் இருக்கிறார். இவருடைய அப்பா பழ கருப்பையா முதலமைச்சராக நடித்துள்ளார். விஷாலின் அண்ணனாக நடித்துள்ள ராம்கி அடுத்த முதல்வராக ஆசைப்படுகிறார்.

இதற்காக பிரபல அரசியல் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்து மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் குண்டு வெடித்து அரசியல் தலைவர் உயிரிழந்து விடுகிறார். இந்த பழி விஷாலின் குடும்பத்தின் மீது விழ அதில் எப்படி குடும்பத்தை மீட்கிறார் என்பது தான் படத்தின் கதை.

படத்தை பற்றிய அலசல் :

விஷால் ஒன் மேனாக இந்த படத்தை கொண்டு சென்றுள்ளார். படம் முழுவதும் ஓடுறதும் பறக்கறதும் இருந்தாலும் விஷாலுக்கு அது பொருத்தமாக அமைந்துள்ளது.

ஐஸ்வர்யா லட்சுமி விஷாலின் காதலியாக சிறப்பாக நடித்துள்ளார். தமன்னா விஷாலை ஒரு தலையாக காதலிக்கிறார், அவருக்கு உதவியாக இரண்டாம் பாதி முழுவதும் வலம் வருகிறார்.

ராம்கி, பழ. கருப்பையா ஆகியோர் படத்தில் அவர்களின் வேடங்களை சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.

தொழில்நுட்பம் :

இசை :

ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆக்ஷன் படத்திற்கு தகுந்த ம்யூசிக். பின்னணி இசையில் பின்னி பெடலெடுத்துள்ளார். பாடல்கள் சூப்பர்.

ஒளிப்பதிவு :

Dudly இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். காட்சிகளை அழகாக படமாக்கியுள்ளார்.

எடிட்டிங் :

என்.பி ஸ்ரீகாந்த் இப்படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார். படத்தின் நேரத்தை மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

இயக்கம் :

சுந்தர். சி இந்த படத்தின் தலைப்பிற்கேற்ப படம் முழுவதையும் ஒரே ஆக்ஷனாக கொண்டு சென்றுள்ளார். படத்தின் சண்டை காட்சிகளை பிரதமாக படமாக்கியுள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. சண்டை காட்சிகள்
2. விஷால் நடிப்பு
3. பாடல்கள்

தம்ப்ஸ் டவுன் :

1. ஒரு சில காட்சிகள் மட்டும் என்னதான் படம் பேரே ஆக்ஷனாக இருந்தாலும் அதுக்குன்னு அளவில்லையா என்று சொல்ல வைக்கிறது.

2. வழக்கமான லாஜிக்கல் தவறுகள்

REVIEW OVERVIEW
ஆக்ஷன் விமர்சனம்.!
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
%e0%ae%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%b7%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8dமொத்தத்தில் ஆக்ஷன் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத படம்.