Ajith’s Valimai Movie Update Revealed By Suresh Chandra

வெறித்தனத்துக்கு காத்திருங்க - Valimai பற்றி Ajith தரப்பில் இருந்து வெளியான அறிக்கை! | H Vinoth | HD

Announcement on Valimai Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்க போனிகபூர் தயாரித்து வருகிறார். படத்தின் அப்டேட் வெளியிடுமாறு தொடர்ந்து அஜித் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இப்படியான நிலையில் தற்போது தல அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் வலிமை படப்பிடிப்பில் அஜித் ரசிகர்களுக்கு, அஜித் நமக்கு ஏற்படும் காயங்களையும் பொருட்படுத்தாமல் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டுமென நடித்து வருகிறார்.

கடினமாக உழைக்கும் அஜித் குமார் அவர்களும் அனுபவமுள்ள தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களின் தகுந்த நேரத்தில் வலிமை படத்தின் அப்டேட்டை வெளியடுவார்கள். அதுவரை அமைதியாக காத்திருங்கள்.

அவர்களின் முடிவுக்கு மதிப்பளியுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் விரைவில் வலிமை படத்தின் அப்டேட் வெளியாகும் அதைத்தான் சுரேஷ் சூசகமாக அறிவிக்கிறார் என சிலர் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் வலிமை படத்தின் அப்டேட் இப்போதைக்கு வெளியாக வாய்ப்பில்லை எனவும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.