யாரும் என்னை வந்து சந்திக்க வேண்டாம்! - சிம்பு வைத்த உருக்கமான கோரிக்கை! | Silambarasan TR | HD

Simbu Request to Fans About His Birthday : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஈஸ்வரன்.

கொரானா காலகட்டத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் படுவேகமாக உருவாகி வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.

இந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தலை என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

Simbu Request to Fans About His Birthday

மேலும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

வரும் பிப்ரவரி 3ஆம் தேதி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இந்த நிலையில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் யாரும் என்னுடைய பிறந்தநாள் அன்று வீட்டின் அருகே வந்து காத்திருக்க வேண்டாம். நான் அன்று வெளியே செல்கிறேன். என்னுடைய குடும்பத்தாராகிய என் ரசிகர்கள் என் வீட்டின் வெளியே காத்திருந்து ஏமாற்றம் அடைவதை நான் விரும்பவில்லை.

ஆகையால் என்னை பார்க்க யாரும் வீட்டிற்கு வர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் என்னுடைய பிறந்தநாளில் மாநாடு படத்தின் டீசர் வெளியாகும். கண்டு களியுங்கள் என தெரிவித்துள்ளார்.