மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் விஜய் வைத்த வேண்டுகோள்! - என்ன சொன்னார் தெரியுமா? | Thalapathy Vijay

Vijay Advice to Fans Club Leaders : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ளது.

தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும் என சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் மாவட்ட நிர்வாகிகளுடன் திடீர் சந்திப்பை ஏற்படுத்தி ஆலோசனை நடத்தி வருகிறார். அரசியல் பற்றிய முடிவு எடுக்கப்படலாம் என கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகிகள் உடனான சந்திப்பின் போது தளபதி விஜய் மக்கள் பணிகளை மக்களுக்கான உதவிகளை தொடர்ந்து செய்யுங்கள். வழக்கம் போல உதவிகள் என்னிடம் இருந்து வரும் என கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியல் களத்தில் தகுந்த சூழ்நிலை ஏற்படும்போது தளபதி விஜய் நிச்சயம் அரசியலில் என்ட்ரி கொடுப்பார் எனவும் கூறப்படுகிறது.