பயிர்க்கடன் தள்ளுபடி : முதல்வருக்கு நன்றி தெரிவித்து விவசாய சங்கங்கள் பாராட்டு | Tn govt | EPS

Formers Thanks to Cm EPS : விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன் 12, 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய, ரங்கநாதன், தமிழ்நாடு காவிரி பாசன விவசாயிகள் சங்கம்:

பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டதற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தோம்.

சிறந்த அளவில் முதலமைச்சர் செய்துள்ளார், இது மறக்க முடியாத நிகழ்வு.

Formers Thanks to Cm EPS

இந்தியாவிலேயே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மட்டும் தான் விவசாயிகளுக்கு அதிகளவு செய்துள்ளார்.

பி.ஆர்.பாண்டியன், ஒருங்கிணைப்பாளர், தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் அவர்கள் கூறியதாவது.

எங்களின் கோரிக்கையை ஏற்று நிதி நெருக்கடியிலும் முதலமைச்சர் தொடர்ந்து நிவாரணங்கள் வழங்கினார்.

இந்நிலையில் நிதி நெருக்கடியையும் பொருட்படுத்தாமல் 12,110 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்துள்ளது பாராட்டுகுரியது. அதற்காக முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தோம் என கூறினார்.