தமிழக முதல்வரின் அதிரடி நடவடிக்கை - முதல் முறையாக அதிரடியாக குறைந்த கொரானா பாதிப்பு! | Tn Govt

Corona Update in Tamilnadu : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவிலும் இதுவரை பல லட்சக் கணக்கான பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலும் பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வந்தது. ஆனாலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான அதிமுக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக கொரானா வைரஸ் பரவல் தொடர்ந்து கட்டுக்குள் வைக்கப்பட்டு வந்தது.

ஜூலை 8 க்கு பிறகு ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முதல் முறையாக பாதிப்பு நான்காயிரத்திற்கும் குறைவாக பதிவாகி இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மட்டும் ( அக்டோபர் 18 ) கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,914 ஆக பதிவாகியுள்ளது. 56 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக பாதிப்பின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருப்பது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.