ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒரு ஆட்டை ஒருவர் தன் உயிரை பணயம் வைத்து தூக்கிய சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.
சமீபத்தில் திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் மீட்க முடியாமல் மரணமடைந்த சம்பவம் நாடெங்கும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆழ்துளை கிணற்றினுள் விழுந்த ஒரு ஆட்டுக்குட்டியை வாலிபர் ஒருவர் மீட்கும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. மூன்று பேர் அவரின் காலை பிடித்துக்கொள்ள அவர் கீழே இறங்கி ஆட்டுக்குட்டியை மேலே தூக்கி வரும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ சில வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
Man risks life to rescue lamb from abandoned borewell